Header Ads



பசில் ராஜபக்ச மிகவும் திறமையானவர், அவரைப் போன்ற ஆளுமைமிக்கவர் இலங்கையில் வேறு யாரும் இல்லை


பசில் ராஜபக்ச மிகவும் திறமையான ஒரு தலைவர் என்றும், அவரைப் போன்ற ஆளுமைமிக்க ஒருவர் இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கிய தலைவரான பசில் ராஜபக்சவின் அரசியல் மற்றும் நிர்வாகத் திறன்களைப் பாராட்டிப் பேசியுள்ளார்.


நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்கும் ஆற்றல் பசில் ராஜபக்சவுக்கு மட்டுமே உண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.