Header Ads



கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள், பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன


கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 பேரை கல்கிசை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 


கடந்த ஜூலை 18 ஆம் திகதியன்று வீடு ஒன்றை உடைத்து 14,100,000 ரூபா (ஒரு கோடியே நாற்பத்தொரு இலட்சம் ரூபாய்) பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. 


இதற்கமைய, நேற்று (6) தெஹிவளைப் பகுதியில் இக்குற்றத்துடன் தொடர்புடைய இரண்டு பெண் சந்தேகநபர்களும், ஹட்டன் பத்தன பகுதியில் அந்த குற்றத்திற்கு ஒத்தாசை வழங்கிய ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதன்போது, திருடப்பட்ட 8 ஜோடி தோடுகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு வளையல், 10 தங்க சங்கலிகள், ஒரு கைக்காப்பு, 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


கைதானவர்கள் 28, 46, 53 வயதுடைய பெண்களும், 28 வயதுடைய ஹட்டன் பத்தனப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.