Header Ads



பிச்சைக்காரர்களையும் விட்டுவைக்காத பஸ் லலித், மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி


டுபாயில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கண்ணங்கர என்ற பஸ் லலித்  கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


 அப்பகுதிகளில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. யாசகர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் பஸ் லலித் லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்நிலையில் குறித்த நபரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.