Header Ads



சிங்களவர்களின் வரிப்பணத்தில் செம்மணி, மனிதப் புதைக்குழி அகழ்வு பணி - வீரவன்ச


இந்த நாட்டில் வரி செலுத்துவதில் சிங்களவர்கள் பெரும்பான்மையானவர்களாக உள்ளார்கள். சிங்களவர்களின் வரிப்பணத்தைக் கொண்டு  செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளை இந்த அரசாங்கம் வந்தததன் பின்னர் தீவிரப்படுத்தியுள்ளது.


சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது. புலிகள் அமைப்பு சிங்களவர்களை கொன்று புதைத்த புதைகுழிகள் பற்றி ஏன் கவனம் செலுத்தவில்லை.


செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்படுகிறது. அதற்கு நீதி கோரி கத்தோலிக்க அருட்தந்தையர்கள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை குற்றங்கள் நிறைந்த இராச்சியம், இங்கு யுத்தக்குற்றங்களும், இனவழிப்பும் இடம்பெற்றுள்ளன என்று சர்வதேச அரங்குக்கு காண்பிக்கும் செயற்பாடுகளே தற்போது இடம்பெறுகிறது.


- விமல் வீரவன்ச -

No comments

Powered by Blogger.