சுவிட்சர்லாந்திலும் ருமேஷ் தரங்க தங்கம் வென்றார்
சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12ஆவது கட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இப்போட்டியில், 88.14 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்து அவர் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ருமேஷ் தரங்க மூன்று டைமண்ட் லீக் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே, 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment