கத்தாரில் வசிக்கும் நீர்கொழும்பு மக்களை ஒன்றிணைக்க நடைபெற்ற கிரிக்கெட் தொடர்
இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய Negombo Challengers அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
தொடர் முழுவதும் வீரர்களின் திறமைகள் மற்றும் சிறப்பான ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தனிப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய Jeesan, Batsman of the Tournament விருதை வென்றார்.
மேலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய Nifras, Bowler of the Tournament விருதை தட்டிச் சென்றார்.
அத்துடன் தொடர் முழுவதும் ஒட்டுமொத்தமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய Jeesan, Player of the Tournament என்ற கௌரவத்தையும் பெற்றுக்கொண்டார்.
7 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடர், கத்தாரில் வாழும் நீர்கொழும்பு மக்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகள், வீரர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்திலும் இத்தகைய விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துவதற்கான எதிர்பார்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
கத்தாரில் இருந்து அப்துல் முஜீப்





Post a Comment