இலங்கையர்களிடையே உயர்ந்து நிற்கும் இந்தியா
உலகின் 36 நாடுகளில் 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டின் பெப்ரவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலகளவில் சராசரியாக 45 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து நேர்மறையான எண்ணத்தையும், 41 சதவீதமான மக்கள் எதிர்மறையான எண்ணத்தையும் கொண்டுள்ளனர்.
இலங்கையின் சாதகமான பதில் ஆய்வில் பங்கேற்ற இலங்கையர்களில் 79 சதவீதமானோர் இந்தியா குறித்து மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவைத் தங்களின் முக்கியமான நட்பு நாடாகவும் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 65 சதவீதமாக இருந்த இந்த சாதகமான பார்வை, தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் 91 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து கடும் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர். 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். துருக்கி, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளில் இந்தியாவுக்கான ஆதரவு முறையே 15% மற்றும் 18% ஆகக் குறைந்துள்ளது

Post a Comment