வாழ்க்கை எப்போதும் நம்முடைய திட்டத்தின்படி நடப்பதில்லை…
ஆனால், ஊருக்கு வந்த அந்த மகன் முதலில் ஓடிச்சென்றது உப்பாவைத் தேடி வீட்டிற்கு அல்ல. உப்பா உறங்கிக் கொண்டிருக்கும் கல்லறைக்குத்தான். கபுறுக்குத்தான். “அஸ்ஸலாமு அலைக்கும் உப்பா…” என்று சொல்லிவிட்டு, அந்த மண்ணை பார்த்தபடி நின்றபோது, அவனுடைய மனம் எவ்வளவு வலித்திருக்கும் என்பதை அவன் முகமே சொல்லியது.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவன் மெதுவாக சொன்னான்:
“எல்லாரையும் பார்த்துட்டேன்… இனிமேல் வீட்டுக்குப் போய் உம்மாவைப் பார்க்கணும். நான் வந்திருக்கிறதுகூட உம்மாவுக்குத் தெரியாது…”
வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் ஊருக்குத் திரும்பும் ஒவ்வொரு பயணத்திற்குப் பின்னாலும் இப்படிப்பட்ட ஆயிரம் கதைகள் இருக்கின்றன. சிலர் பல வருடங்களுக்குப் பிறகு பெற்றோரைப் பார்க்க ஓடி வருகிறார்கள்…
சிலர் வந்து சேரும் நேரத்தில், தாங்கள் பார்க்க ஆசைப்பட்ட ஒருவர் இந்த உலகத்தில் இல்லாமல் போயிருப்பதை அறிகிறார்கள்…
காத்திருந்தவர்களைப் பார்க்க முடியாமல் போனாலும், அவர்களின் நினைவுகளை மட்டும் மனதில் சுமந்துகொண்டு திரும்ப வேண்டிய வலி… அதை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.
வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு மகனுக்கும், மகளுக்கும் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் வாழ்க்கை எப்போதும் நம்முடைய திட்டத்தின்படி நடப்பதில்லை…
“நாளைக்கு போய்ப் பார்க்கலாம்…” என்று நாம் தள்ளிப்போடும் ஒரு சந்திப்பு, சில நேரங்களில் வாழ்நாள் முழுவதும் கிடைக்காமல் போய்விடலாம். இன்று சமூக வலைதளத்தில் பார்த்த ஒரு பதிவு மற்றும் வீடியோ மனதை நிறைத்தது. அதே நேரத்தில், கண்களையும் நனைத்துவிட்டது.
பெற்றோர்கள் இருக்கும்போதே அவர்களைப் பார்த்துவிடுங்கள்.
அவர்களுடன் பேசிவிடுங்கள். அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். ஏனென்றால், சில உறவுகளுக்கு “பிறகு” என்ற வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
Vijith Kumar

Post a Comment