Header Ads



மொறட்டுவ கடற்பரப்பில் விபத்து - 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி


மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பரப்பில், கடற்படைக்கு சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதாக, கடற்படை பேச்சாளார் தெரிவித்துள்ளார்.


இந்த விபத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவுத் தெரிவித்துள்ளது.


அவர்களில் 8 பேர் சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த படகை கண்காணிப்பதற்காக வான் படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 ரக உலங்கு வானூர்தி மற்றும் (B) பெல் 412 உலக்கு வானூர்தி ஒன்றும் குறித்த கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.