அழகு நிலையத்தில் 7 கோடி ரூபா ஹெரோயின்: தம்பதியினர் கைது!
மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து (27) இன்று 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை வெலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரிடமிருந்து 2 கிலோகிராம் 45 கிராம் ஹெரோயின், 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு, அவரது 26 வயதுடைய மனைவியிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கூடுதலாக, போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6,25,000 ரூபாய் பணம், 2 மின்னணு தராசுகள் மற்றும் 4 கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு கிராம் ஹெரோயின் 25,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் நாளை (28) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment