Header Ads



மேலும் நாட்டுக்கு பிடித்து வரப்படவுள்ள 74 பேர்


சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது.


போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அதேவேளை, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.