Header Ads



கும்புக்கனயில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழப்பு


மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 


வெல்லவாய - மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த 10 பேரில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 5  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

No comments

Powered by Blogger.