ரியாதிலுள்ள இலங்கை தூதரகம் நடாத்தும் "உங்கள் தூதுவருடன் உரையாடுங்கள்" நிகழ்ச்சியின் 50 ஆவது அமர்வு நிறைவு
ரியாதிலுள்ள இலங்கை தூதரகம்,சவுதி அரேபியாவின் அனைத்து பிரதேசங்களிலும் வசித்து வரும் இலங்கை புலம்பெயர் சமூகத்தினருடன் நெருக்கமான தொடர்பை பேணி அவர்களின் நலன்களை கவனிக்கு முகமாக இந்த விஷேட நிகழ்ச்சியை சவுதி அரேபிய இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வரும் இலங்கை பிரஜைகளுக்கும்,அவர்களது தூதுவருக்குமிடையில் நெருக்கமான தொடர்பை பேணும் வகையில் சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களினால் இந்த விசேட நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தனித்துவமான நிகழ்ச்சியானது, சவூதி வாழ் இலங்கையர்கள் தமது பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக தூதரகத்தின் உடனடி் உதவிகள் மற்றும் வழிகாட்டல்களை பெற்றுக்கொள்வதற்கும் தூதரகத்துக்கு தமது ஆலோசனைகளை வழங்குவதற்கும் உதவியாக அமைகின்றது.
50 ஆவது அமர்வையொட்டி கருத்துத் தெரிவித்த தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், தூதரகம் முன்னெடுத்துவரும் இலங்கை புலம்பெயர் சமூகத்தை மையப்படுத்தியதான இந்நிகழ்ச்சி மிகப் பயனுள்ள ஓர் முயற்ச்சியாக அமைந்தது என்று வர்ணித்தார். சனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழான தேசிய நிகழ்ச்சித்திட்டமான "நேர்மையான கலாசாரம்- தூய்மையான இலங்கை (கிளீன் ஶ்ரீலங்கா) நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 27-31 வரையான காலப்பகுதியில் அனுஷ்டிக்கப்பட்ட தேசிய நேர்மைக்கான வாரம் இடம்பெற்ற அதே காலப்பகுதியில் இந்த அடைவும் இடம்பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அரச சேவை போன்ற அடிப்படைப் பெறுமானங்களை "உங்கள் தூதுவருடன் உரையாடுங்கள்" என்ற நிகழ்ச்சி பிரதிபளிப்பதாகவும் இந்த நிகழ்ச்சியினூடாக, சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தூதரகம் அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளதாக தூதுவர் குறிப்பிட்டார். குறிப்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்கள், ஆவணங்கள் மற்றும் தூதரக சேவைகள், நலன்புரி சேவைகள், சட்டத்தோடு தொடர்பான விவகாரங்கள், நாடு திரும்புவதற்கான உதவிகள், குடும்ப விவகாரங்களோடு தொடர்பான விடயங்கள், வர்த்தகம் மற்றும் வணிக விடயங்கள் அத்துடன் தூதரக சேவைகளை மேம்படுத்தல் தொடர்பான ஆலோசனைகள் பரிந்துரைகள் என்பன இதில் உள்ளடங்கும்.
இந்த நிகழ்ச்சியினூடாக இதுவரை சுமார் 1000யிற்கும் அதிகமான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 800 யிற்கும் மேற்பட்டவை உடனடியாகவோ அல்லது சம்பந்தப்பட்ட சவுதி நிறுவனங்கள் மற்றும் இலங்கையிலுள்ள திறுவனங்களுடன் நெருக்கமான தொடர்பாடலினூடாகவோ வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எஞ்சியுள்ளவை தொடர்பில் தூதரகம் தொடர்ந்து முனைப்புடன் நடவடிக்கை முன்னெடுத்து வருகிறது.
சவுதி அரேபிய இராச்சியத்தில் வசிக்கும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் தமது தூதரகத்தை நேரடியாக அணுகுவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதுடன், திறந்த கதவுக் கொள்கையை தொடர்ந்தும் பேணுவதில் தூதரகம் அதீத அக்கரை செலுத்துகின்றது. “உங்கள் தூதுவருடன் உரையாடுங்கள்" நிகழ்ச்சியானது மக்கள் மையப்படுத்தப்பட்ட இராஜதந்திர மற்றும் பொது சேவக்கான எமது அணுகுமுறையை பிரதிபலிக்கின்றது. 50ஆவது அமர்வை அடைந்திருப்பது மிக முக்கிய மைல்லாக அமைவது மட்டுமன்றி் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்கள் இந்த நிகழ்ச்சியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது" எனவும் தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்தார்.
"உங்கள் தூதுவருடன் உரையாடுங்கள்" நிகழ்ச்சியானது, இலங்கை சமூகத்தினரிடமிருந்து ஆக்கபூர்வமான பின்னூட்டல்களை பெறுவதற்கான முக்கிய தளமாகவும் மாறியுள்ளதுடன் அதன் மூலமாக தூதரகம் தனது தூதரக மற்றும் நலன்புரி சேவைகளை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கு உதவுவதுடன் தூதரகத்தின் மீதான பொது மக்களின் நம்பிக்கையையும் மேலும் வலுவூட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து,சமூகத்துடனான தொடர்பை ஏற்படுத்துவதற்கான இந்த முன்னெடுப்பானது,தூதரகத்தின் மிகவும் வெற்றிகரமானதும் பரவலாக பாராட்டப்பட்டதுமான மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. முன்கூட்டி நேரம் ஒதுக்குதல் அல்லது இடைத்தரகர்களின் உதவி இன்றி இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள், தொழில்துறை சார்ந்தவர்கள்,வர்த்தகர்கள்,மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் போன்றோர் தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்புகொள்ளக்கூடிய நம்பகமான தளமாக இது மாறியுள்ளது .
தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேலதிகமாக, இந்த நிகழ்ச்சி தூதரகத்திற்கும் இலங்கை சமூகத்திற்கும் இடையிலான தொடர்பாடலை மேலும் மேம்படுத்தியுள்ளது. தூதரக சேவைகள், தொழிலாளர் விதிமுறைகள், சட்ட நடைமுறைகள், வர்த்தகம் மற்றும் வணிக வாய்ப்புகள், அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்குப் பொருத்தமான கொள்கை முன்னேற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் இது அதிகரித்துள்ளது.
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள், தங்களது பிரச்சினைகள் மற்றும் கவலைகளை முன்வைக்கவும், தங்களது கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பெறுமதியான தளத்தை தொடர்ந்து பயன்படுத்துமாறு தூதரகம் கேட்டுக்கொள்கிறது.
இதன் மூலம் சவூதி அரேபிய இராச்சியத்தில் உள்ள இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர் சமூகத்திற்கும் தூதரகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பும் கூட்டுறவும் மேலும் வலுப்பெறுகிறது.
நிகழ்ச்சி நடைபெறும் நேரம்: இந்நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, வியாழக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்று வருகிறது.
தொடர்பு கொள்ள: தொலைபேசி / WhatsApp / IMO:
+966 56 975 3380
.jpg)
Post a Comment