செம்மணி புதைகுழி அகழ்வுக்கு 5 கோடி 79 இலட்சம் ரூபாய் செலவு
செம்மணி மனிதப் புதைக்குழியில் மூன்று கட்டங்களாக இதுவரை சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதற்காக 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் 584 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் இரத்த மாதிரிகளைச் சேகரித்து மரபணுச் (DNA) சோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் தொடர் கண்காணிப்புடன் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment