அடுத்த 48 மணி நேரத்திற்குள் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
கண்டி மாவட்டத்தில், உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே கோரளை, கங்க இஹல கோரளை, கங்கவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ மற்றும் பஹத்ததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment