விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.
பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment