Header Ads



காத்திருக்கும் 25.000 நோயாளிகள்


இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 25,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.


இதில், சில இருதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் 2029ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளது.


அரச சுகாதாரத் துறையில் அதிகரித்து வரும் காத்திருப்புப் பட்டியல் நெரிசலைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். 

No comments

Powered by Blogger.