Header Ads



விமானத்தை கடத்த திட்டமிட்ட டக்ளஸ்


விமானத்தில் ஏற்றிய போது குறித்த விமானத்தைக் கடத்துவதற்கு தான் திட்டமிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


1983 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி வெலிக்கடையில் சிறைச்சாலையிலிருந்து எங்களை  மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு விமானத்தில் ஏற்றிய போது விமானத்தைக் கடத்துவோம் என்ற எண்ணம் வந்தது. விமானத்தைக் கடத்தி இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என நினைத்தேன். அந்த நேரம் சக கைதிகள் இதனை விரும்பவில்லை. அதனால் அந்த திட்டத்தைக் கைவிட்டேன்.


பின்னர் விமான நிலையத்தில் இறங்கி சிறைச்சாலைக்கு கொண்டு வரும் நேரத்தில் இடையில் ஏதாவது செய்யலாம் என யோசித்தேன். எனினும் நான் தப்பினால் மற்றவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என நினைத்தேன். நாங்கள் சிலர் தப்பியோடாமல் பெருமளவானோர் தப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சிறைச்சாலைக்குள் சென்றோம். கூட்டு முயற்சியின் பயனாக ஒன்றரை மாதங்களுக்குள் மட்டக்களப்பு சிறைச்சாலை உடைக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.