இனவெறி வசைச்சொற்களிலிருந்து முஸ்லிம் பெண்ணை காப்பாற்றியவர் அடித்துக் கொலை
பெல்ஜியம் - பிரஸ்ஸல்ஸ் (பொதுப் போக்குவரத்து Tram இல்) வசைச்சொற்களிலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணைக் காப்பாற்ற தலையிட்டதாகக் கூறப்படும், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கடைக்காரர், கடுமையாகத் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார்.
குறித்த முஸ்லிம் நபர் அப்பெண்ணை நோக்கி இனவெறி மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு வசைச்சொற்களைப் பயன்படுத்திய ஒரு நபரை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. அவர் பின்னாலிருந்து தாக்கப்பட்டு. தரையில் கிடந்தபோது கடுமையாகத் தாக்கப்பட்டார்.
குறித்த முஸ்லிம் நபர் ஆரம்பத்தில் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவரது காயங்கள் மிகவும் கடுமையாக இருந்தன. பின்னர் அவர் கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தார்.
அல்லாஹ் அவரை ஒரு தியாகியாக ஏற்றுக்கொண்டு, அவருக்கு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக. ஆமீன்.

Post a Comment