இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக பிரேமரத்ன
முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான அநுர குமாரவினால், இராணுவ பதவி நிலைப் பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன லெப்டினன்ட் ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் இன்று (31) அவரிடம் கையளி்க்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இப்பதவி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாத்தறை புனித சேவியர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பிரேமரத்ன, 1990 ஆம் ஆண்டு பயிலுநர் கெடற் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்தார்.

Post a Comment