அரசாங்கம் எடுத்துள்ள அறிவற்ற தீர்மானம்
இன்று (29) 1 நடைபெற்ற அச்சங்கத்தின் விசேட பொதுச்சபை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சட்டத்தரணிகள் அனைவரும் கரங்களை உயர்த்தி இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அரசாங்கம் எடுத்துள்ளது ஒரு அறிவற்ற தீர்மானம் எனத் தெரிவித்த சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய, இது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட பலத்த அடி என்றும் குறிப்பிட்டார்.
இன்று (29) மாலை 5 மணிக்கு நீதி அமைச்சரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். "எம்மை குறுகிய காலத்தில் மறந்துவிட்டாலும் நாங்கள் எமது கடமையை நிறைவேற்றுவோம். எம்மை ஒதுக்கிவிட்டுச் செல்ல முயன்றாலும், எம்மீது சேறுபூசும் தாக்குதல்கள் வந்தாலும் நாங்கள் எதற்கும் தயங்காமல் முன்னோக்கிச் செல்வோம். இன்றைய தினம் மாலை 5 மணிக்கு நீதி அமைச்சரை சந்திக்கவுள்ளோம். அவரும் எங்களில் ஒருவர் தான். அவர் அமைச்சராக இல்லாமல் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக இருந்திருந்தால் இதை விட அதிகமாகக் குரல் கொடுத்திருக்கக்கூடும்."

Post a Comment