Header Ads



கட்டார் அரச குடும்பத்தினரை சந்தித்து இரங்கலைத் தெரிவித்த பிரதமர்


பிரதமர் கட்டார் அரச குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார்!


காலஞ்சென்ற முன்னாள் (Father Amir) ஷேக் ஹமட் பின் கலீபா அல்-தானி அவர்களின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் இரங்கலைத் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜூலை 15ஆம் திகதி அல் வஜ்பா அரண்மனைக்கு சென்றார்.


அங்கு, கட்டார் நாட்டின் அமீர் அவர்களின் தாயாரும் கட்டார் அறக்கட்டளையின் தலைவியுமான ஷேக்கா மோசா பின்ட் நாசர் அவர்களிடம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர், காலஞ்சென்ற முன்னாள் அமீர் அவர்களின் மகள்மார்களான இளவரசி, ஷேக்கா அல் மயஸ்ஸா பின்ட் ஹமட் அல் தானி இளவரசி  ஷேக்கா ஹிந்த் பின்ட் ஹமட் அல் தானிஆகியோருக்கும், அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும், கட்டார் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப விவகாரங்கள் அமைச்சர் புதைனா பின்ட் அலி அல் ஜபர் அல் நுஜைமி Al Nuaimi) அவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.