ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விக்ரமரத்னவிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம்
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம் என அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பிறகு .சி.டி. விக்ரமரத்ன காவல்துறை மா அதிபராக பணியாற்றியதால், ஒரு உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி என்ற முறையில், அந்தச் சம்பவம் குறித்து அவரிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்பும் அவர் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்ததை அமைச்சர் அதன்போது நினைவு கூர்ந்துள்ளார். காவல்துறை விசாரணைகளிலிருந்து குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளிவராததால், விழிப்புடன் இருப்பது அவசியம் என்று அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment