Header Ads



மனைவி சாப்பாடு தயார் செய்ய தாமதம் - கணவர் செய்த விபரீத செயல்...


பீகார் - ஜெனாபாத்தை சேர்ந்தவர் குணால் குமார். இவரது மனைவி அன்ஷி தேவி (வயது 25)  நேற்று (29)  வெளியே சென்ற குணால் குமார் நண்பர்களுடன் மது குடித்தார். போதை தலைக்கேறி, பசி ஏற்பட  வீட்டிற்கு வந்தார்.  மனைவி அன்ஷு தேவியிடம் உடனே சாப்பாடு வேண்டும் என்று கேட்டார்.


அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் தயாராகி விடும் என கூறினார். இதனை கேட்டதும் குணால் குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஏன் தாமதமாக சமையல் செய்து கொண்டிருக்கிறாய் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்கு மனைவி சிறிது நேரத்தில் உணவு தயாராகி விடும் என தெரிவித்தார்.


இதனை கேட்டதும் குணால் குமாருக்கு மனைவி மீது ஆத்திரம் ஏற்பட்டது.


வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து மனைவியை கிழே தள்ளி சரமாரியாக தாக்கினார். அவரது மனைவி கெஞ்சினார். இருப்பினும் கோடாரியால் மனைவியின் கழுத்தில் வெட்டினார். இதில் தலை துண்டித்து விழுந்தது. மனைவியின் தலையை ஒரு கயிற்றில் கட்டி வீட்டின் முன்பக்கமாக உள்ள மரத்தில் தொங்கவிட்டார். எங்கும் தப்பித்து செல்லாமல் மரத்துக்கு அடியிலேயே அமர்ந்திருந்தார்.


இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அன்ஷு தேவியின் தலையையும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திர்க்கு அனுப்பினர்.

No comments

Powered by Blogger.