"ஒரு கோப்பி குடிப்போம்"
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன மரணிப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன் அவர் மைத்திரிபால சிறிசேனவை தனது நெருங்கிய நண்பருடன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சி.டி.விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்,
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன என் மிக நெருங்கிய நண்பர். குறிப்பாக நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையாகவும், நற்குணங்களுடன், அமைதியாகவும், சாந்தமானகவும் பணியாற்றினார்.
அவர் யாரையும் கோபத்துக்கு உள்ளாக்கவில்லை, யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை. அரகலய போராட்டக் காலத்தில் கூட மிக திறமையாக செயற்பட்டவர். நான் உங்களுடைய வீட்டுப் பக்கமும் வந்து போக வேண்டும், சும்மா ஒரு கோப்பி குடிப்போம்" என்று கூறினார்

Post a Comment