Header Ads



பிரபல வர்த்தகரின் மகனான, டியூசன் உரிமையாளரின் மோசமான செயல்


ஹொரண பகுதியில் மேலதிக வகுப்பு  ஒன்றை நடத்திச் செல்லும் உரிமையாளர் ஒருவர், மாணவர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் விநியோகித்து வந்தமை தொடர்பில்  கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து 15 கிராம் 250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மடிக்கணினி கைப்பேசி அதனுடன் தொடர்புடைய சிம் அட்டை மற்றும் போதைப்பொருளை நிறுத்துப் பார்க்கப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் தராசு ஆகியனவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்டுள்ளவர் ஹொரண,  பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவராவார். இவர் ஹொரணையின் பிரபல வர்த்தகரின் புதல்வராவார். தினந்தோறும் 200 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் பிரதான தர மேலதிக வகுப்பின் உரிமையாளர் என்பதும் விசாரணைகளில் தெரியవந்துள்ளது.

No comments

Powered by Blogger.