தமிழ், முஸ்லிம் கட்சிகள் உருவாக்கியுள்ள கூட்டணி வெறும் கூட்டு சாம்பார்
தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி என்பது, அது வெறும் கூட்டு சாம்பாராக மாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இடமில்லை என்பது மக்களுக்கு தெரிந்த விடயம். எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டணி இந்த நாட்டில் இலஞ்சத்தை ஒழிப்பதற்காக, மோசடிகளை ஒழிப்பதற்காக திருடர்களைப் பிடிப்பதற்காக, இதுபோன்ற நல்ல வேலைகளைச் செய்வதற்கான கூட்டணியா? அல்லது திருடர்களைப் பாதுகாப்பதற்கும், வஞ்சகர்களைப் பாதுகாப்பதற்கும், ஊழல் மோசடிகளை செய்பவர்களை பாதுகாப்பதற்கான கூட்டணியா என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
இந்தக் கூட்டணியில் இருக்கின்றவர்களைப் பார்க்கின்ற பொழுது கடந்த காலங்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு இன்றைக்குப் பிணையில் இருக்கின்ற நபர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment