அபூர்வ சுலைமான் கல் - இருவர் கைது
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபா (2.5 கோடி) பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் எனக் கூறப்படும் ‘ராவண கல்’ ஒன்றை விற்பனை செய்ய முயன்ற கிண்ணியா, மூதூர் பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கல் 550 கிராம் நிறையுடையது எனவும், இது 4 அங்குல நீளமும், சுமார் 6.5 அடி சுற்றளவும் கொண்டதாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
'ராவண கல்' என்பது இலங்கையில் புராணக் கதைகளுடனும், சமீபத்திய புதையல் மோசடிகளுடனும் தொடர்புடைய ஒரு வகையான அபூர்வகல் அல்லது தொல்பொருளாகும். இது உள்ளூர் மக்களால் “சுலைமான் கல்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கற்களுக்கு மந்திர சக்தி இருப்பதாகவும், தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பு பெற பயன்படுவதாகவும் உள்ளூர் மக்களால் பேசப்படுகிறது. (TM)

Post a Comment