Header Ads



தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்


ஹோமாகம, கட்டுவான பகுதியில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 26 வயதான வரதராஜன் தமயந்தி  தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 தமயந்தியின் உடல் இன்று ( 23) ஆம் திகதி அதிகாலை 3:00 மணியளவில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான வரதராஜன் தமயந்தியின் குடும்பத்தில், மூத்த சகோதரர் ஒருவர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள், பெற்றோர் உள்ளடங்களாக ஆறு பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவரது தந்தை தோட்டத்தொழிலாளி என்றும், குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக, அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக இரண்டு நாட்கள் விடுப்பில் அவர் கடைசியாக வீட்டிற்கு சென்று மீண்டும் பணிக்கு திரும்பியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று ( 23) தோட்ட பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

No comments

Powered by Blogger.