அர்ச்சுனா தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அர்ச்சுனா Mp இன்று (27) விசேட மனுத் தாக்கல் (Motion) ஒன்றின் மூலம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதற்கமைய, குறித்த வழக்கை வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் அர்ச்சுனாவிற்கு பிணை வழங்கப்பட்டது.
அவருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், கடந்த 24ஆம் திகதி அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Post a Comment