Header Ads



சபாநாயகருக்கு எதிராக ஊழல், மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து முறைப்படியான விசாரணையை நடத்துமாறு கோரி முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


பிவிதுரு ஹெல உறுமய கட்சி இன்று (30)-07-2026) லஞ்ச அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவில் (CIABOC) இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் உபுல் கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட இம்முறைப்பாட்டுடன் சபாநாயகரின் ஊழல் செயற்பாடுகளுக்குச் சான்றாக 10 எழுத்துப்பூர்வ ஆவணச் சான்றுகளும் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன.


சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சான்றுகளில் பின்வரும் முக்கிய குற்றச்சாட்டுகளாக, “சபாநாயகருக்கு உரித்தான உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மேலதிகமாக பிறிதொரு வீட்டையும் பயன்படுத்தியமை. உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த தளபாடங்கள் மற்றும் சாதனங்களைத் தனது தனிப்பட்ட வீட்டிற்கு எடுத்துச் சென்றமை மற்றும் அங்குத் தனிப்பட்ட ஊழியர்களைத் தங்க வைத்திருந்தமை. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தனக்கு உரித்தான எரிபொருள் ஒதுக்கீட்டிற்கும் (Fuel Quota) அதிகமாக மேலதிக எரிபொருளைப் பெற்றுக்கொண்டமை” என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.