Header Ads



பிரதமரை கண்காணித்த கிண்ணியா முள்ளிப்பொத்தானை இளைஞர்கள் கைது


கொழும்பில் உள்ள  நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு பிரதமர்  ஹரினி அமரசூரிய நேற்று (21) சென்றிருந்த போது, அவரை கண்காணித்த சந்தேகத்தின் பேரில் 3  நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாளை (23) சமர்ப்பிக்குமாறு, கோட்டை நீதவான் நீதிமன்றம் கொம்பனி தெரு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.


சந்தேக நபர்களான மூவரில் இருவர் சகோதரர்கள் என்றும் அவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.