அல்லாஹ் கொடுத்ததிலிருந்து, அல்லாஹ்வின் வழியில் கொடுங்கள்.
நாம் யாருடைய ஜனாஸாவை தொழ வைக்க போகிறோமோ, அவர் தன் வீட்டின் ஒரே சம்பாதிப்பவராகவும், ஆதரவாகவும் இருந்தார். துக்கத்தில் இருப்பவர்களில் ஒரு விதவை மற்றும் 3 சிறு குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.
இத்தாவின் நாட்களில் அவர்களுக்கு வருமானத்திற்கு எந்த வழியும் இல்லை. ஆகையால் ஜனாஸாகாவின் பிரதான வாசலில் ஒரு சாதர் விரிக்கப்பட்டுள்ளது.
பகட்டு இல்லாமல், அல்லாஹ்வின் திருப்திக்காக 1 ரூபாயிலிருந்து தங்கள் தகுதிக்கு ஏற்ப எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை அங்கே போடுங்கள்.
ஜனாஸாவிற்கு அடக்கத்திற்குப் பிறகு, பணம் எண்ணப்பட்ட போது 1 லட்ச ரூபாய்கு மேல் சேர்ந்திருந்தது. யாரோ 10 ரூபாய், யாரோ 100, யாரோ 500, 1000 கொடுத்தார்கள். ஆனால் இந்த கூட்டு அனுதாபம் அந்த அனாதை குழந்தைகளுக்கு பல மாதங்களுக்கு பொருளாதார நிம்மதியை கொடுத்தது.
தஃஸியத் என்பது வெறும் கை உயர்தி துஆ செய்வது மட்டும் அல்ல. துக்கத்தின் நேரத்தில் நடைமுறையில் துணையாக இருப்பதுதான்.
நபி கரீம் ﷺ அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் ஒரு மரத்தை நட்டால், அதனால் மனிதனுக்கோ, பறவைக்கோ, விலங்குக்கோ பயன் கிடைத்தால், நட்டவருக்கு அதன் நன்மை கிடைத்துக்கொண்டே இருக்கும்."
ஜன்னத்திற்கான எளிதான வழி அல்லாஹ்வின் படைப்புகளுக்கு சேவை செய்வதில் மறைந்துள்ளது. அல்லாஹ் கொடுத்ததிலிருந்து அல்லாஹ்வின் வழியில் கொடுங்கள்.
சுபஹானல்லாஹ். இதுதான் உண்மையான இஸ்லாமிய சமூகம். துக்கத்திலும் கூட ஒருவருக்கொருவர் உதவுவது. இது போன்ற முயற்சிகளை நம் ஊர்களிலும் தொடங்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

Post a Comment