சர்வ மத ஒன்றியத்தின் வலிறுத்தல்
சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் வலிறுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளது.
எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

Post a Comment