ரணில் செல்வது இது முதல் முறையாகும்..
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பங்களிப்புடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு, ஸநாமல் ராஜபக்ஷ, சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி அந்தச் சந்திப்பை நடத்தலாம் என சஜித் பிரேமதாச அறிவித்ததை அடுத்து, இதற்கான திகதி உறுதி செய்யப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக, ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் வியாழக்கிழமை (23) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்திற்குச் செல்லவுள்ளார். சஜித் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு ரணில் செல்வது இது முதல் முறையாகும்.

Post a Comment