Header Ads



வசந்த சமரசிங்க உடனடியாகத் பதவி விலக வேண்டும்


இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து வரும் நிலையில், நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய   அமைச்சர் வசந்த சமரசிங்க உடனடியாகத் பதவி விலக வேண்டும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 


கொழும்பில் டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சரின் பொறுப்பு திருடர்களைப் பிடிப்பது அன்று. மாறாக, நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். அவருக்குப் பொலிஸ் பணியைச் செய்ய விருப்பமாக இருந்தால், பொலிஸ்மா அதிபர் பதவியை வழங்கிவிட்டுத் தகுதியான ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.