அமெரிக்காவுக்கு என சொந்தமாக நாகரிகமோ, வரலாறோ, மானமோ கிடையாது...
அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள ஈரான் தலைவர்களை அமெரிக்காவால் ஒரே குண்டில் ஒட்டுமொத்தமாக அழித்துவிட என்ற ட்ரம்பின் ஆணவப் பேச்சுக்கு, ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது X தளத்தில் பதிலடி கொடுத்துள்ளது.
"மனிதர்களைக் கொல்ல முடியும், ஆனால் கொள்கைகளைக் கொல்ல முடியாது. நீங்கள் அயதுல்லா கமேனியைக் கொன்றுவிட்டதாக நினைக்கிறீர்கள். ஆனால், உண்மையில் நீங்கள் ஒரு நறுமணப் போத்தலை உடைத்திருக்கிறீர்கள். இப்போது அதன் வாசம் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.
உங்களால் இந்த மக்களின் துக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், அமெரிக்காவுக்கு என்று சொந்தமாக நாகரிகமோ, வரலாறோ அல்லது மானமோ கிடையாது. அதனால்தான் உங்களால் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை" என தெரிவித்துள்ளது.

Post a Comment