Header Ads



குஷ் கொண்டுவந்த பெண் பிடிபட்டார்


கட்டுநாயக்க  விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களைக் கடத்தி வர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று (14)  கைது செய்யப்பட்டுள்ளார்.


அவர் கொண்டு வந்திருந்த இரண்டு சூட்கேஸ்களைச் சோதனையிட்டபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பொட்டலங்களில் சுமார் 6 கிலோகிராம் மற்றும் 180 கிராம் எடையுள்ள 'குஷ்' ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 


இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 61.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர் 63 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.