எனது மூளை, உடல் உறுப்புகள் இன்னமும் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன
ஓய்வூதிய வயதை மேலும் 5 ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்துவதன் மூலம் மக்களின் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். மனிதர்களால் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற முடியும்.
நாட்டின் சாதாரண இராணுவ வீரர்கள் 20 ஆண்டுகள் சேவைக் காலத்துக்குப் பின்னர் (சுமார் 45 வயதில்) ஓய்வுபெற வேண்டியுள்ளது. அந்த வயதில்தான் அவர்களின் பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருப்பதுடன், புதிதாக வேறு ஒரு வேலையைப் பெற்றுக்கொள்வதும் அவர்களுக்குக் கடினமாகவுள்ளது.
இராணுவ அதிகாரிகள் 50 அல்லது 55 வயதிலும், அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெறும்போதும் அவர்களின் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர்.
சில நாடுகளில் நீதிபதிகள் 70 வயதிலேயே ஓய்வூதியம் பெறுகின்றனர். அப்படியிருக்கையில் நமது நாட்டு மக்களுக்கு மட்டும் ஏன் இதில் தயக்கம் உள்ளது? நான் இராணுவப் பணியிலிருந்து விலகி 20 ஆண்டுகள் ஆனாலும், எனது மூளை மற்றும் உடல் உறுப்புகள் இன்னமும் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Post a Comment