A/L பரீட்சாத்திகளுக்கு முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் மேற்காள்ள முடியும் என்றும், இந்த காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டிய பாடசாலைப் பரீட்சார்த்திகள், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேவையான திருத்தங்களை இணையவழியில் செய்துகொள்ள வேண்டும்.
மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் பரீட்சார்த்திகள், பரீட்சைத் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கமான 1911, தொலைபேசி இலக்கங்களான 0112784208 அல்லது 0112784537, தொலைநகல் 0112784422 அல்லது gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்புகொள்ளலாம்.

Post a Comment