ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை மரணம்
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த கிராமத்தில் உள்ள வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலின் தடி எதிர்பாராத விதமாக முறிந்து சரிந்து விழுந்துள்ளது. அப்போது தாயுடன் இருந்த 5 மாதக் குழந்தை மீது தடி விழுந்ததில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் குழந்தையின் தாயாரின் காலிலும் தடி விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தீபன் -

Post a Comment