இன்றும் 2 பேரை தூக்கில் போட்டது ஈரான்
ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள அலிகானி சதுக்கத்தில், இன்று (28) அபோல்ஃபஸ்ல் செபாஹி பத்ஜானி (வயது 23) மற்றும் அமீர்ஹொசைன் சஃபாரி ஹொசைனாபாதி (வயது 29) ஆகிய இருவர் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர்.
ஜனவரி 2026-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்களுக்காக இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்; அதே இடத்தில்தான் இந்தத் தூக்குத் தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே ஜூலை 19 அன்று இருவர் தூக்கிலிடப்பட்ட நிலையில், மேலும் எட்டு பேர் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

Post a Comment