160 மில்லியன் பணத்தை மோசடி, தலைமையகத்தில் தலைமறைவாக இருந்த பெண்
கொழும்பு, புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 6 வர்த்தகர்களிடம் 160 மில்லியன் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், ஹொரணையின் முன்னாள் (UNP) நகர சபை உறுப்பினர் ரேணுகா தமயந்தி, வத்தளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகர்களுக்குப் போலியான காசோலைகளை (Bounced cheques) வழங்கி, 160 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர்களைத் தவிர்த்து தலைமறைவாக இருந்த நபர், சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இருப்பதாக வர்த்தகர்களுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், வர்த்தகர்கள் சிறிகொத்தவிற்குச் சென்று குறித்த நபரை எதிர்கொண்டனர். அங்கு வர்த்தகர்களுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட், மிரிஹான பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர்.
மிரிஹான பொலிஸாரின் விசாரணைகளின் போது, வர்த்தகர்கள் முன்னாள் நகர சபை உறுப்பினருக்கு எதிராக உத்தியோகபூர்வ முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தனர். இதனையடுத்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் வத்தளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Post a Comment