Header Ads



150 சட்டத்தரணிகளுடன் காய் நகர்த்தும் விஜயதாச


விஜயதாச ராஜபக்ச தனது மகன் தொடர்பில் கடந்த நாட்களில் எதுவும் பேசாமல் இருந்தார். அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் சிலர் சந்தித்துள்ளனர். அதன்போது தனது மகன் மற்றும் சரித்திற்கு நடந்தவை குறித்தும் முதன்முறையாக பேசியுள்ளார்.


ஒரு தந்தையாக என்னால் நீதிமன்றத்தில் அவனுக்காக முன்னிலையாக முடியாது. ஆனால் 150 பேரைக் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ரகித மற்றும் சரித் ஆகியோருக்காக முன்னிலையாகத் தயாராக உள்ளது. நான் இல்லாவிட்டாலும் எனக்குத் தெரிந்த திறமையானவர்கள் முன்னிலையாகத் தயாராக இருக்கிறார்கள்.


எனக்குத் தெரிந்த வகையில், சமூகத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காக, யாரையாவது ஊழல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வெளியில் கொண்டுவந்தால் ஒரு பரபரப்பு ஏற்படுமல்லவா..? அதன் மூலம் அந்தப் பிரச்சினைகளை மூடிமறைக்கலாம் என்பதற்காக இது செய்யப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன் என்று விஜயதாச  தனது பேச்சின் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.