Header Ads



சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள், ட்ரம்பிற்கு எதிராக வழக்கு


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 3  நீதிபதிகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் சட்டவிரோதமானவை என்றும் நீதிமன்ற சுதந்திரத்தை அச்சுறுத்தித் தங்களைப் பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கனடாவைச் சேர்ந்த கிம்பர்லி ப்ரோஸ்ட், உகாண்டாவின் சொலோமி பலுங்கி போஸ்ஸா மற்றும் பெனின் நாட்டைச் சேர்ந்த ரெய்ன் அடிலெய்ட் சோஃபி அலாபினி-கான்சோ ஆகிய மூன்று நீதிபதிகளே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.


பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததற்கும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் புரிந்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த அனுமதித்ததற்கும் பழிவாங்கும் வகையில் கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகம் இந்தத் தடைகளை விதித்தது. 

No comments

Powered by Blogger.