பொலிஸ் நிலையங்கள் தொடர்பில் மக்கள் தமது முறைப்பாடுகள், பாராட்டுகள், ஆலோசனைகளை தெரிவிக்க
இலங்கை பொலிஸ் தனது சேவைகளை வினைத்திறனுடனும், மக்கள் மையப்படுத்தியதாகவும் மாற்றுவதற்காக, "Sri Lanka Police Community Feedback Portal" என்ற பெயரில் புதிய (Online Digital Platform) முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் தொடர்பிலும் மக்கள் தமது கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுகள், ஆலோசனைகளை எளிதாகத் தெரிவிக்கும் வசதியை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். பெறப்படும் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, பொலிஸ் சேவையை மேலும் சிறந்ததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
QR குறியீட்டைப் பயன்படுத்தும் முறை: இந்தத் தளத்தைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.
இணையதளம் வாயிலாகப் பங்களிக்க விரும்புவோர், police.lk என்ற இணையதளத்திற்குச் சென்று ‘E-Services’ மூலம் இந்த ‘Community Feedback Portal’-ஐ அணுகித் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்

Post a Comment