ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் உரிய பொது மன்னிப்பினை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு சீலரத்ன தேரர் ஜனாதிபதி அநுரகுமாரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியலமைப்பைச் சரியாகப் பின்பற்றினால் எவராலும் எவ்விதப் பிரச்சினையும் இன்றி பணியாற்ற முடியும். அதனை மீறும் போதுதான் ஊழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் உருவாகின்றன.
அதிகாரம் கிடைத்தவுடன் அரசியலமைப்பை மறந்து, தங்களின் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் பிரச்சினைகளை உருவாக்கி நாட்டை அழித்துப் பாழாக்குகின்றனர் எனவும், கோத்தபய ராஜபக்ஸ துமிந்து சில்வாக்குக்கூட பொது மன்னிப்பை வழங்கியதாகவும் சீலரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment