Header Ads



தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், விலைகளை செயற்கையாக உயர்த்தும் நிலை


இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கம் ஏதுமில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், தேவையற்ற தேவையை உருவாக்கி, சில இறக்குமதிப் பொருட்களின் விலைகளை செயற்கையாக உயர்த்தும் சூழலை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


“இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அமெரிக்க டொலருக்கான தேவையை குறைப்பது போன்ற செயல்முறைகளில் ஈடுபடும் நோக்கம் ஏதுமில்லை” என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.