பாலியல் துஷ்பிரயோகத்தில் கைதானவர் மௌலவி அல்ல
இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் அவர் "மௌலவி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை தவறானதாகும்.
குறித்த சந்தேக நபர் எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் பட்டம் பெற்ற ஒரு மௌலவி அல்ல, மேலும் அவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிலோ அல்லது இறக்காமம் கிளைச் சபையிலோ அங்கத்தவரும் அல்ல என்பதை எமது சபை உறுதிப்படுத்துவதுடன் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
இறக்காமம் பிரதேச கிளை
2026.06.01

Post a Comment