Header Ads



இலங்கையின் பொருளாதாரம் வலுவாக வளர்ச்சி - முதல் காலாண்டில் 5.1% உயர்வு!

 
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.


திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி,


கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.48 ட்ரில்லியன் ரூபாயாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.65 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.


இதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.1 சதவீத வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.